Federation of Merchants Association opposes property tax hike- சொத்துவரி உயர்வுக்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு
சொத்துவரி உயர்வுக்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சொத்துவரி பல மடங்காக உயர்த்தப்பட்டது. வணிகக் கட்டிடங்களுக்கு கூடுதலாக வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது.இதில் இருந்து மக்கள் மீண்டு வர இயலாத நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியில் சொத்துக்களின் மீது 6 சதவீதம் கூடுதல் வரி விதிக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கடந்த மாதம் பன் மடங்க உயர்த்தப்பட்ட உரிமக்கட்டணமும், தொழில் வரியும் நீக்கப்பட வேண்டும் என்கிற பேரமைப்பின் கோரிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், மீண்டும் சொத்து வரி உயர்வு என்பது வணி கர்களுக்கு மிகப்பெரும் சுமையாகும்.இது அரசுக்கு எதிர்ப்பான மனநிலையை வணிகர்கள் பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும். எனவே உடனடியாக சொத்துவரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
