தமிழகத்தின் 4 புதிய அமைச்சர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை / tamil nadu new ministers paid tribute to anna and kalaignar memorial

  மாலை மலர்
தமிழகத்தின் 4 புதிய அமைச்சர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை / tamil nadu new ministers paid tribute to anna and kalaignar memorial

தமிழக அமைச்சரவையில் நேற்றிரவு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர் உள்பட நான்கு பேருக்கு அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இன்று (செப்டம்பர் 29) மதியம் 3.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மூலக்கதை