பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப்பெறுகிறது பாஜக / BJP withdraws complaint against parithabangal
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது.லட்டு பரிதாபங்கள் வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலின் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.அந்த பதிவில், "கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான விடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால்... அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்ததாக கூறி 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்தார்.இந்நிலையில், 'லட்டு' வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் தொலைபேசி வாயிலாக மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.Gopi and Sudhakar have spoken to TN BJP State Coordinator, Th @HRajaBJP avl, and offered their sincere Apologies for creating a derogatory video about Lord Venkateswara Swamy Prasadam.Therefore, I have decided to drop my complaint against the Parithabangal Channel. I will…




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
