செந்தில் பாலாஜி மீது ஆக., 2ல் குற்றச்சாட்டு
சென்னை : அமலாக்கத் துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக ஆக., 2ம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்தாண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து, தன்னை விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சமீபத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.மேலும், அமலாக்கத் துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில், 'அமலாக்கத் துறை வழக்கில் விடுவிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும்' என, செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.அல்லி, ஆக., 2ம் தேதி குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
