கொலைகளை தடுக்க முதல்வர் கவனம் செலுத்தணும்: வாசன்
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், நாள்தோறும் ஆங்காங்கே திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. அரசியல் கட்சியினர் மீதான தாக்குதல் கொலை அதிகரித்துள்ளது. ஒருபுறம் சமூக விரோத செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது, போதைப்பொருள் கலாசாரம். மறுபுறம் சமூக விரோதிகளை அடையாளம் காண, கண்காணிக்க, நடவடிக்கை எடுக்கத் தவறும் அரசாக, தமிழக அரசு செயல்படுவது தான்.குறிப்பாக போதைப்பொருட்கள் பள்ளி, கல்லுாரி வளாகத்தின் அருகிலும், பொதுவெளியிலும் மிக எளிதாகக் கிடைக்கிறது. அப்படி என்றால் போலீசார் நடவடிக்கை என்ன, அரசு யாருக்கு ஆதரவாக இருக்கிறது, பணத்துக்காகவா, அரசியல் கட்சியினரின் சிபாரிசுக்காகவா என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.சட்டம் -- ஒழுங்கில் முதல்வர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி, தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு அழிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் உட்பட, பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள, சட்டம் - ஒழுங்கை கடுமையாக்க வேண்டும். இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
