''நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை'': முதல்வர் ஸ்டாலின் பதில்

  தினமலர்
நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைய உள்ள நிலையில், பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு, ''நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை'' என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு நாகலாந்து கவர்னராக இருந்தார். இவரின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைகிறது. இதனால் இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுப்பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை'' என பதிலளித்தார். மேலும் அவர் கூறியதாவது: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வரிடம் பேசியிருக்கிறேன். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. வயநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ராகுல் மீதான சாதி ரீதியிலான தாக்குதல் குறித்து இப்போது கருத்து கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை