31 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
சென்னை: தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோ ஜாக்' அமைப்பினர், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை மற்றும் எழும்பூரில் உள்ள சமூக நலக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட, அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து, டிட்டோஜாக் அமைப்பின் மாநில தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:இதுவரை, பள்ளிக்கல்வி துறை, ஒன்றிய அளவிலான பதவி உயர்வு வழங்கி வந்த நிலையில், தற்போது, 243 என்ற அரசாணையை வெளியிட்டு, தமிழக அளவிலான பதவி உயர்வு வழங்குகிறது.இதனால், ஒரு ஆசிரியர் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் நிலையில், 250 கி.மீ., துாரத்துக்கு அப்பால் உள்ள ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், ஆசிரியைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, புதிய அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம், பிடிக்கப்பட்ட ஒப்படைப்பு ஊதியம் வழங்குதல், இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தை கைவிடல் உள்ளிட்ட, 31 கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று நாள் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். கோரிக்கை ஏற்கப்படும்பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியதாவது:போராடும் ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமான ஆறு கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளோம். இன்று அவர்களுடன், பள்ளிக்கல்வி துறை செயலர் பேச உள்ளார். அவர் பேசிய பின், நிதிநிலை சார்ந்த, சாராத பிரச்னைகளில் உடனடியாக நிறைவேற்றும் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
