ரேஷன் கடைகளில் மதுபானம், கள் விற்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு
சென்னை: கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மது விற்க அனுமதி கோரியும் அளித்த மனுவை, அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கோட்டூரை சேர்ந்த முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:கடந்த 2003 முதல், 'டாஸ்மாக்' நிறுவனம் வாயிலாக மது விற்பனை நடக்கிறது. சில்லரை விலைக்கும் கூடுதலாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. மொத்த விற்பனையில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடக்கிறது. மறுபரிசீலனைஇந்தத் தொகை, விற்பனையாளர் முதல் துறையின் அமைச்சர் வரை பங்கிடப்படுவதாக, தகவல் கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலான மதுபான தயாரிப்பு நிறுவனங் கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளன. இதனால், குறிப்பிட்ட சில, 'பிராண்ட்' மதுபானங்களை மட்டுமே டாஸ்மாக் நிறுவனம் விற்கிறது. மதுபானங்களை விட, கள்ளில் ஆல்கஹால் அளவு மிகக்குறைவாக உள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில், எந்த இடையூறும் இன்றி கள் விற்பனை நடக்கிறது. இதை, ஆரோக்கிய பானமாக கருதுகின்றனர். அரசு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யலாம். கள் விற்பனையை ஒழுங்குபடுத்தலாம். எனவே, சூப்பர் மார்க்கெட்டுகளில் அனைத்து ரக மதுபானங்களும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். நியாய விலை கடைகளில், குறைந்த விலையில் மதுபானம் கிடைக்க வேண்டும். கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் வெளியில், அதிக விலையில் மது விற்கவில்லை என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.கள் விற்பனைக்கு தடை விதித்த, 1986ம் ஆண்டிலும், டாஸ்மாக் கடைகள் வாயிலாக மதுபான விற்பனைக்கு அனுமதித்த, 2003ம் ஆண்டிலும் அமல்படுத்திய சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் அமர்வு' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. தன் குற்றச்சாட்டுகள் குறித்து, மோசடி வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு உத்தரவிடும்படி, மனுதாரரான முரளிதரன் கோரினார்.அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், இந்த வழக்கில் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து, குற்றச்சாட்டுக் கள் குறித்து அரசு பதில் அளிக்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என, முதல் அமர்வு தெரிவித்தது. கொள்கை முடிவுகள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்க சில பரிந்துரைகளை மனுதாரர் தெரிவித்திருப்பதாகவும், அரசின் கொள்கை முடிவு என்பதால், அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் முதல் அமர்வு தெரிவித்தது. ரேஷன் கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் மது விற்பனை மற்றும் கள் விற்பனைக்கான தடையை நீக்கக்கோரிய மனுதாரரின் மனுவை, அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும், உத்தரவிட்ட முதல் அமர்வு, விசாரணையை, எட்டு வாரங் களுக்கு தள்ளி வைத்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
