55% கூடுதலாக பெய்தது தென்மேற்கு பருவமழை
சென்னை: இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை மாதங்களில் இயல்பை விட 55 சதவீதம் அதிகமாக பெய்து உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று(ஜூலை 30) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலை ஆகஸ்ட் 4ம் தேதி வரை தொடரலாம். மேகமூட்டம்சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் இங்கு செல்ல வேண்டாம். நெல்லையில் கூடுதல்தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 32.80 செ.மீ., மழை பெய்யும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை துவங்கிய ஜூன் 1 முதல், ஜூலை 29 வரையிலான காலகட்டத்தில், தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட, 55 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதாவது, இந்த இரு மாதங்களில் வழக்கமாக, 11.5 செ.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 17.9 செ.மீ., பெய்துள்ளது. அதேநேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் 21.6 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பு அளவான 3.8 செ.மீ.,யை விட, 4.58 சதவீதம் அதிகம். அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலுார், திருவாரூர், துாத்துக்குடி மாவட்டங்களில், இயல்பை விட குறைந்த அளவில் மழை பெய்துள்ளது. இவை தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும், இயல்பை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை, நீலகிரி, ராணிப்பேட்டை, தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர் மாவட்டங்களில், 100 சதவீதத்துக்கு அதிகமாக மழை பெய்துஉள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
