மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
வெற்றிலை 4 இருந்தாலே, பல்வேறு உடல்நலக் கோளாறுகளைத் தீர்க்கலாம் என்கிறார்கள்..
உடலுறுப்புகளைப் பலப்படுத்துவதில் வெற்றிலையின் பங்கு என்ன தெரியுமா? வைட்டமின் C, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம் போன்ற சத்துக்களுடன் கால்சியமும் இரும்புச்சத்துக்களும் நிறைந்துள்ளதால், உடலுறுப்புகள் அத்தனைக்கும் பலத்தைத் தருகின்றன இந்த வெற்றிலைகள்.
தாய்ப்பால் சுரப்பி
தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குவதுடன், வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. இதனால், குடல், ஈரல், மண்ணீரல், மூளை, இதயம், கல்லீரல், போன்ற உறுப்புகள் முழு ஆரோக்கியம் பெறுகின்றன.. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால், வளரும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு தருவது அவர்களின் நினைவாற்றலைப் பெருக்கும் என்கிறார்கள்.
பாக்கு இல்லாவிட்டாலும், வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும்.. பூச்சிக்கடி, விஷக்கடி, சரும அலர்ஜி, போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், 2 வெற்றிலையுடன் 5 மிளகு, சிறிது கல் உப்பு சேர்த்து மென்று விழுங்கினால் பலன் கிடைக்கும்.
எப்போதுமே வெற்றிலையைச் சாப்பிடும்போது, அதன் காம்பு, நுனி, நடு நரம்பு இவைகளை நீக்கி விட்டே சாப்பிட வேண்டும்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இந்த மூன்றுமே சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
அதேபோல, வெற்றிலையை மென்று, உடனே அதன் சாற்றை விழுங்கக்கூடாதாம்... வெற்றிலை பாக்கினை நன்றாக மென்று முதல் இரண்டு உமிழ்நீரினை வெளியே துப்பிவிட வேண்டுமாம்.. அதற்கு பிறகுதான், சாற்றை விழுங்க வேண்டும் என்கிறார்கள்
உடலில் அதிகம் பித்தம் சேர்ந்துவிட்டால், பாக்கு நிறையச் சேர்த்து, காலை உணவுக்குப் பிறகு வெற்றிலை போடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமாம்.. உடலில் வாதம், வாயு அதிகம் சேராமல் இருக்க வேண்டுமானால், மதிய உணவிற்குப் பிறகு சுண்ணாம்புச் சத்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம்..
இரவில் வெற்றிலைகளை அதிகப்படுத்திப் போட்டு வந்தால் நெஞ்சில் கபம் தங்காது, இது பற்களில் கிருமிகள் சேராமல் தடுக்கிறது.. வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது என்கிறார்கள்.
மூன்று வேளையும் இப்படிச் சரிவிகிதத்துடன் வெற்றிலை பாக்கு போடுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.. ஆனால், இந்த வெற்றிலையுடன் புகையிலையைச் சேர்த்துச் சாப்பிடும்போதுதான் சிக்கல்கள் வந்துவிடுகிறதாம்.. சிலர் வெற்றிலையுடன் கடலை மிட்டாய் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.. இதுவும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாக உணவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்..!!




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
