கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (60). பட்டறைத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள், 2 மகன்கள் உள்ளனர்.
வேளாண் கருவிகளான மண்வெட்டி, அரிவாள், களைக்கொத்து, கோடாரி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களான அரிவாள்மணை,தோசை சட்டி, பணியாரச் சட்டி போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ஈஸ்வரன். இதற்காக ஊர் எல்லையில் பட்டறை அமைத்துள்ளார்.
தொடக்கத்தில் தான் தயாரித்த பொருட்களைப் பேருந்தில் கொண்டுசென்று, கிராமங்களில் விற்பனை செய்துவந்தார். பின்னர் 3 சக்கரச் சைக்கிளில் இவற்றைக் கொண்டு சென்று விற்பனை செய்தார். பலஊர்களுக்கும் செல்வது சிரமமாக இருந்ததால், மூன்று சக்கரச் சைக்கிளில் இரு சக்கர வாகனத்தின் இன்ஜினைப் பொருத்தி, அதைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதில் கிடைத்த அனுபவத்தால், சொந்தமாகச் சிறு ரக வாகனத்தைத் தயாரிக்கும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து ‘மினி ஜீப்’ தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காகப் பழைய ஸ்டீல் கட்டில்களை வாங்கி தகடாக மாற்றி, மினி ஜீப்பின் சுற்றுப்புறப் பகுதியை உருவாக்கி உள்ளார். பின்னர், பழைய ஸ்கூட்டரின் இன்ஜினை தனியே எடுத்து, அதில் பொருத்தியுள்ளார். தொடர்ந்து, பழைய இரும்புக் கடையிலிருந்து ஸ்டியரிங், டயர் போன்றவற்றை ஒவ்வொன்றாக வாங்கி, மினி ஜீப்பை வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து ஈஸ்வரன் கூறும்போது, “இந்த மினி ஜீப் லிட்டருக்கு 30 கி.மீ. தொலைவு செல்லும். சின்னமனூர் உள்ளிட்ட சிறு நகரங்களுக்கு இதில் செல்லும்போது பலரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன்,சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வண்டியை வடிவமைக்க ரூ.80 ஆயிரம் செலவாகி உள்ளது. 15 நாட்களில் செய்து முடித்தேன். ஸ்கூட்டர் இன்ஜின்என்பதால், இந்த மினி ஜீப்புக்குகியர் கிடையாது. ஆக்ஸிலேட்டர் மற்றும் பிரேக் மட்டும்தான் உள்ளது.இதில் 4 பேர் செல்லலாம். அல்லது250 கிலோ வரையிலான சுமைகளை இதில் ஏற்றிச் செல்லலாம்” என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
