பள்ளி தோட்டத்தில் பயிரிட்டு விளைந்த காய்கறிகள் சத்துணவுக்கு கொடுத்து அசத்தும் மாணவர்கள்

தினமலர்  தினமலர்
பள்ளி தோட்டத்தில் பயிரிட்டு விளைந்த காய்கறிகள் சத்துணவுக்கு கொடுத்து அசத்தும் மாணவர்கள்

விவசாயத்தை ஊக்குவிக்க எத்தனை விழிப்புணர்வுகள், போராட்டங்கள். முன்னெல்லாம் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் விவசாயப் பணிகளை முடித்த பின் தான் மற்ற பணிகளையே செய்வர்.

வரும் தலைமுறையினருக்கு விவசாயத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இயந்திரங்களைக் கொண்டு விவசாயம் செய்யலாம் என்றால் கூட, ஆட்கள் கிடைப்பது அரிதாகி விடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது.

விவசாயத்தை நம்பித்தான் உலகம் இயங்குகிறது என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்தினால் மட்டுமே விவசாயத்தை பாதுகாக்க முடியும். படிப்பு ஒரு பக்கம் இருந்தால் கூட, விளையாட்டு, விவசாயம் முக்கியம் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் காரியாபட்டி பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்த காலியிடங்களில் தோட்ட பயிர்கள் பயிரிட மாணவர்கள் முன் வந்தனர். ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து, மண் வளத்தை பக்குவப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தினர்.

அதற்கு பின் அரைக்கீரை, தண்டங்கீரை, வெண்டை, சீனியவரை, பீர்க்கை, உள்ளிட்ட தோட்ட பயிர்களை பயிரிட்டனர். இயற்கை உரமிட மண்புழு உரங்களை தயாரித்தனர். பயிர்களுக்கு இயற்கை உரமிட்டு நன்கு வளர்ந்து, விளைந்த காய்கறிகளை அப்பள்ளியில் உள்ள சத்துணவுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். கூடுதலாக மாணவர்களுக்கு காய்கறிகளை சமைத்து கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அனைத்து பள்ளிகளிலும் விவசாயம், தோட்ட பயிர்கள் பயிரிடுவது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்களேயானால் விவசாயம் செழிப்பதோடு, வருங்கால சந்ததியினர் விவசாயத்தை கைவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை ஏற்படும்.

ஆசிரியர்கள் எங்களை சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். படிக்க வேண்டிய நேரத்தில் படிப்பும், விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட்டும் கற்றுத் தருகின்றனர். நாங்கள் மண்புழு உரம் தயாரிக்கிறோம். தோட்ட பயிர்களுக்கு இயற்கை உரமிட்டு வளர்க்கிறோம். விளைவித்த காய்கறிகளை சத்துணவுக்கு வழங்குகிறோம். எங்கள் உழைப்பில் உருவான காய்கறி என்பதால் அதன் சுவையே தனிதான். தொடர்ந்து பல்வேறு வகையான மூலிகை செடிகள், பழ மரக்கன்றுகள் நட்டு வருகிறோம்.

- சரவணன், 9ம் வகுப்பு மாணவர்.



மாணவர்கள் தரிசு நிலங்களில் தோட்ட பயிர்களை பயிரிட ஆர்வமாக இருந்தனர். அவர்களை ஊக்குவிக்க ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து நேரம் கிடைக்கும் போது நிலத்தை பக்குவப்படுத்தி, தோட்ட பயிர்களை பயிரிட உறுதுணையாக இருந்து, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறோம். மாணவர்கள் ஆர்வமுடன் செயல்படுவதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

- பொன்ராம், ஆசிரியர்.



விவசாயத்தை ஊக்குவிக்க எத்தனை விழிப்புணர்வுகள், போராட்டங்கள். முன்னெல்லாம் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் விவசாயப் பணிகளை முடித்த பின் தான் மற்ற பணிகளையே செய்வர்.வரும்

மூலக்கதை