தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் கருவி கல்வி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு

தினமலர்  தினமலர்
தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் கருவி கல்வி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு

திண்டுக்கல்: ''தாழ்ந்து கிடக்கும் நம் மக்களை உயர்த்தும் ஒரே கருவி கல்வி'' என,குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சந்நிதானம் பொன்னம்பல அடிகளார் பேசினார்.

திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் நடந்த 55வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: நேற்றைய துன்பத்தை இன்றைய இன்பமாக காட்டுவதற்கான ஒரே வழி கல்வி எனும் செல்வமே. ஸ்டீபன் ஹாக்கின்ஸ், அண்ணாதுரை, பகத்சிங் போன்ற அறிஞர்களின் வாழ்வில் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தினைச் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதன் கால்களால் நடக்காமல் கருத்துக்களால் சிந்தனையால் நடக்க வேண்டும். நாட்டின் மேன்மை, மனித குலத்தின் மேன்மை என்ற உயர்ந்த நிலையை நோக்கி நாம் பயணிக்க கல்வி வழிகாட்டும். அதே நேரத்தில், கற்பதற்கும் நடைமுறை வாழ்க்கைகும் முரண்பாடு உள்ளது. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் விலங்குகளாகவே உள்ளன.

அதன் பின் கல்வி அறிவு மூலமாகவே மனிதன் என்ற உயர்வு கிடைக்கிறது. மனிதனின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான ஒரே வழி கல்வி தான். அப்துல்கலாமின் கல்வி சிந்தனையை மாணவர்கள் உள்வாங்கி வாழ்வில் சிறக்க வேண்டும்.தாழ்ந்து கிடக்கும் நம் மக்களை உயர்த்தும் ஒரே கருவி கல்வி என்று கூறிய விவேகானந்தரின் வாசகத்தினையும் மனதில் உறுதிமொழியாகக் கொண்டு வாழ வேண்டும். பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

கல்லுாரியின் தாளாளர் ரெத்தினம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கை சமர்ப்பித்தார். குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சந்நிதானம் பொன்னம்பல அடிகளார் 2019--2022 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற 1093 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லுாரி இயக்குநர் துரை ரெத்தினம், அறங்காவலர் நாராயணராஜூ, கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன், துணை முதல்வர்கள் சகுந்தலா, நடராஜன், பதிவாளர் சின்னக்காளை, ஆலோசகர் ராமசாமி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் மதிவாணன்,தேர்வு அலுவலர் சீனிவாசன் பங்கேற்றனர்.

திண்டுக்கல்: ''தாழ்ந்து கிடக்கும் நம் மக்களை உயர்த்தும் ஒரே கருவி கல்வி'' என,குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சந்நிதானம் பொன்னம்பல அடிகளார் பேசினார்.திண்டுக்கல்

மூலக்கதை