நாளை தமிழக பட்ஜெட்: தமிழகத்தில் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

தமிழக சட்டசபையில் நாளை (வெள்ளிக்கிழமை) 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட்டை தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.அதாவது, சென்னையில் மட்டும் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 100 இடங்களில் 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று ஒளிபரப்பப்படுகிறது.அதேபோல், 137 நகராட்சி பகுதியில் 274 இடங்களிலும், பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் என மொத்தம் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மூலக்கதை
