மதுரையில் லாரி மீது பஸ் மோதி விபத்து - ஒருவர் பலி

மதுரையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சுக்குள் பயணிகள் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகலை ஒருவர் பலிபேருந்துக்குள் சிக்கிய பயணிகள் கிரேன் உதவியுடன் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இதில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மூலக்கதை
