ரேஷன் கடையை உடைத்து, கரும்புகளை கபளீகரம் செய்த காட்டு யானைகள்
நீலகிரி,நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கரும்பு கட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் அருகே உள்ள ரேஷன் கடைகளை தேடி காட்டு யானைகள் வர தொடங்கி உள்ளன. கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பாண்டியாறு குடோன் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக கரும்பு கட்டுகள் ரேஷன் கடைக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பதிவேடுகள், விற்பனை முனைய எந்திரத்தை வெளியே தூக்கி வீசி உடைத்து சேதப்படுத்தியது. அதோடு அங்கிருந்த அத்தியாவசிய பொருட்களை தின்றன.இருப்பினும், பரிசுத்தொகுப்புக்கான பச்சரிசி, கரும்பு போன்றவை உள் அறைக்குள் பாதுகாப்பாக இருந்ததால், அதை வெளியே எடுக்க முடியாமல் காட்டு யானைகள் சிரமப்பட்டன. அதோடு கரும்பு கட்டுகளை எடுத்து ருசிக்க முடியவில்லை. இதனிடையே சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நாடுகாணி வனத்துறையினர் அங்கு வந்து காட்டு யானைகளை விரட்டினர்.இருப்பினும், கரும்பு கட்டுகளை தேடி காட்டு யானைகள் அப்பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் காட்டு யானைகள் வரக்கூடிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
