தமிழ்நாட்டில் மக்களால் நிம்மதியாக வெளியில் நடமாட முடியவில்லை - ராமதாஸ் கண்டனம்
சென்னை,பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூவரை கொடூரமாக படுகொலை செய்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கேட்பவர்களின் இதயத்தை நடுங்கச் செய்யும் இத்தகைய கொலைகள் கண்டிக்கத்தக்கவை. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கொடூரமாக படுகொலை செய்து நகைகளை கொள்ளையடிக்கும் அளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? காவல்துறை அதன் கடமைகளைச் செய்கிறதா அல்லது ஆளுங்கட்சியினரின் குற்றங்களை மறைத்து, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறாதா? என்ற வினா எழுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் எத்தனை வினா எழுப்பினாலும் விடை கிடைக்காது என்பது தான் வேதனையான உண்மை.தமிழ்நாட்டின் காவல்துறையினர் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினருக்கு இணையானவர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுப் பத்திரம் வாசித்து இரு நாட்கள் ஆவதற்குள் இப்படி ஒரு கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்குக் கூட இயலாத நிலையில் தான் தமிழ்நாட்டு அரசும், காவல்துறையும் உள்ளன. தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுவதற்கு இது தான் சான்றா? என்பதை அரசும், காவல்துறையும் விளக்க வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள மக்களால் நிம்மதியாக வெளியில் தான் நடமாட முடியவில்லை என்றால், நிம்மதியாக வீட்டில் கூட உறங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. ஆனால், மக்களின் துயரங்கள் எதையுமே புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டின் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கவும், தமிழ்நாட்டு மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
