அதிமுக தொடங்கிய திட்டங்களை ஸ்டாலின் நிறுத்திவிட்டார்: இ.பி.எஸ்
திருச்சி: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழககத்தின் (அ.தி.மு.க) பொதுச் செயலாளரான இ.பி.எஸ் என்றழைக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னைத் தாக்கிப் பேசியதற்குப் பதிலடி தந்துள்ளார்.விருதுநகரில் நடந்த விழாவில் திரு ஸ்டாலின், “பொய் சொல்லலாம். பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது,” என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த திரு பழனிசாமி, “நான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி புள்ளி விவரங்களுடன் துண்டுச்சீட்டு இல்லாமல் பேசுகிறேன். ஸ்டாலினும் கடந்த 3 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி பேசத் தயாரா? “அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக, ‘அம்மா மினி கிளினிக்’ மருந்தகத் திட்டத்தை முடக்கி ரத்து செய்துவிட்டனர். மடிக்கணினி திட்டத்தை ரத்து செய்துவிட்டனர். “டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இப்போது உரம் தேவை. அது முழுமையாகக் கிடைக்கவில்லை. திறமையற்ற அரசு நடந்துகொண்டிருக்கிறது,” என்று சாடினார்.ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), 202ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்ட திட்டங்களில் 10 விழுக்காட்டுத் திட்டங்கள்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
