விஜய்யை முதல்வராக்க கடுமையாக உழைக்கவேண்டும்: புஸ்ஸி ஆனந்த்
பெரம்பலூரில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “தமிழக வெற்றி கழகத்தினர் முதல் மாநாட்டை எப்படி நடத்த போகிறார்கள் என்று உலகமே உற்று நோக்கி வந்த நிலையில் ஒவ்வொரு தொண்டரும் நிர்வாகிகளும் ஒற்றுமையோடு ஒவ்வொருவரின் குடும்பத்தில் நடக்கும் விழாவாக நினைத்து கடுமையாக உழைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். “யார் என்ன சொன்னாலும் சரி, தமிழக வெற்றிக் கழத்தினருக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் விஜய் தான். உங்களுக்காக முதலில் வந்து நிற்பதும் அவர்தான். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் மட்டுமே உள்ளன. 2026ல் முதலமைச்சர் இடத்தில் விஜய்யை உட்கார வைப்பதற்கு நாம் உழைக்க வேண்டும். “நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதனைச் செயல்படுத்த வேண்டும். நல்ல விஷயங்களுக்காக நல்ல முறையில் நமது கட்சியை பயன்படுத்தி தமிழக வெற்றி கழகத்தை வளர்ப்பதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். “இப்போது சாலையில் செல்லும் 10 கார்களில் 8 கார்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகளைக் கட்டி செல்கின்றன. இன்று உச்சத்தில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு தலைவர் உண்டு என்றால் அது விஜய்தான். இனி வரும் காலங்களில் இதுபோன்ற மாநாடுகள் நிறைய நடத்தப்பட உள்ளது. “அதற்கும் தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். வருகிற 16, 17, 23, 24ஆம் தேதிகளில் நடக்கவுள்ள வாக்காளர் பெயர் சேர்க்கை, திருத்தம் முகாம்களில் தமிழக வெற்றி கழகத்தினர் கலந்து கொண்டு வாக்குச்சாவடி வாரியாக சென்று பொதுமக்களில் விடுபட்ட பெயர்களை சேர்க்கவும் திருத்தம் செய்வதற்கும் உதவ வேண்டும்,” என்று பேசினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
