2030க்குள் டிரில்லியன் டாலர் பொருளியல் மாநிலமாக்குவதே இலக்கு: ஸ்டாலின்
சென்னை: தமிழ் நாட்டில் 10.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு கடந்த 42 மாதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன என்று தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று (சனிக்கிழமை) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பச் சேவைகள், துணிமணி மற்றும் ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நேற்று தொடங்கப்பட்டன. இதன்மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட இருக்கின்றன.அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் நிம்மதியாகத் தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாகத்தான், கடந்த மூன்றாண்டுகளாக ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாகி வருகின்றன.திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற, இந்த மூன்று ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது.உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்து, அதன்மூலம், 2030ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் இலக்கை அடைவதற்காக நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது. இந்த இருமுனை முயற்சி, இப்போது சாதகமான பலன்களைத் தருகிறது என்றார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, அரசுச் செயலாளர் அருண்ராய், மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, செந்தில் ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி மோகன், செயல் இயக்குனர் சினேகா கலந்துகொண்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
