தமிழகத்தில் நவ.15 வரை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகம் முழுதும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நவம்பர் 15ஆம் தேதிவரை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையின் வழி தெரியவந்துள்ளது.அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இம்மாதம் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நிலையம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.தயார் நிலையில் சென்னை மாநகராட்சி: மேயர்எதிர்வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை நகரில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் வகையில் முனனெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கியுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த மாதம் பெய்த மழையின்போது, சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “ஒரு சில பகுதிகளில் மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அங்கு மோட்டார்கள் வைத்து மழைநீர் உடனடியாக வெளியேற்றப்படும். இதற்காக மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது,” என்றார் மேயர் பிரியா.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
