மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்: கூடுதல் ஆவணங்கள்
சென்னை: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு, மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.கோவையில், 39 கிலோமீட்டர் நீளம்கொண்ட மெட்ரோ ரயில் திட்டம் அமையவுள்ளது. மொத்தம் 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.சென்ற ஆண்டு ஜூலை மாதம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டன. கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசாங்கம், தமிழக அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியது.இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கைகளில் கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய, மாநில அரசாங்கங்கள் இரண்டும் ஆவலாக இருப்பதால் நிதியுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படாது என்ற நம்பிக்கை நிலவுவதாகக் கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
