வெம்பக்கோட்டை அகழாய்வு: அணிகலன் தயாரிக்க உதவும் கற்கள் கண்டெடுப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேவுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த அகழாய்வில் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.ஜாஸ்பர், சார்ட் என்ற இக்கற்களை நம் முன்னோர்கள், விலங்குகளை வேட்டையாடுவதற்கான கருவிகள் தயாரிப்புக்குப் பயன்படும் மூலப்பொருள்களாகவும் பயன்படுத்தியுள்ளதாக அகழாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.விஜயகரிசல்குளம் பகுதியில் ஏற்கெனவே இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் சுடுமண்ணாலான பகடைக்காய், முத்து மணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பொருள்கள் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
