ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் சிகிச்சைப்பிரிவு
சென்னை: பருவமழை காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 50 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சளிக்காய்ச்சல், டெங்கி, நுரையீரல் தொற்று ஆகியவை அண்மை நாள்களாக அதிகரித்துள்ளன. பெரும்பாலானோர் வெளிப்புற நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றாலும், டிசம்பர் மாதம் வரை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப சிறப்புப் பிரிவுகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு, வியாழக்கிழமை (நவம்பர் 7) திறந்து வைக்கப்பட்டன.“டெங்கி, சளிக்காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில், 50 படுக்கையுடன் கூடிய சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதில், 24 மணிநேரமும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்,” என்று மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்தார்.சராசரியாக 15 பிரிவுகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தேவைக்கு ஏற்ப, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
