விசிகவை வைத்து சதி நடக்கிறது: திருமாவளவன்
சென்னை: அரசியல் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறிவைக்கப்பட்டிருப்பதாக அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சிதறடிக்க விசிகவை கருவியாகப் பயன்படுத்தும் வகையில் சதி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி திமுக தலைமையிலான ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்’ இடம்பெற்றிருப்பது முதன்மையான காரணமாகும். இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர்,” என்று தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய், தனது கட்சி மாநாட்டில், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ எனக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், இதே கோரிக்கையை விசிக முன்வைத்ததால் தங்களைக் குறி வைத்துத்தான் விஜய் அவ்வாறு பேசியதாக அரசியல் வட்டாரத்தில் உரத்த உரையாடல்கள் நடந்ததாகக் கூறியுள்ளார்.இதற்கிடையே, வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நூல் வெளியீட்டு விழா ஒன்றில், திருமாவளவனும் விஜய்யும் பங்கேற்க உள்ளனர். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
