கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்ததோடு எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அண்மைக்காலமாக அந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். அந்தக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. அதையடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால், தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகை பாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை எடப்பாடி பழனிசாமிக்கு இழப்பீடாக வழங்கவும் தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
