திமுக, பாஜகவைத் தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்: அதிமுக உத்தரவு
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (நவம்பர் 6) நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் 82 பேரில் 81 பேர் கலந்துகொண்டனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உள்கட்சித் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உட்கட்சித் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. மேலும், “திமுகவையும் பாஜகவையும் அதிமுகவினர் விமர்சிக்கலாம். ஆனால், அந்தக் கட்சிகளின் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்,” என அவர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
