பாம்பனில் சதுப்பு நிலக்காடு மரக்கன்றுகள் பிரதமர் மோடி காணொலியில் துவக்கினார்

தினமலர்  தினமலர்
பாம்பனில் சதுப்பு நிலக்காடு மரக்கன்றுகள் பிரதமர் மோடி காணொலியில் துவக்கினார்



ராமேஸ்வரம்--பிரதமர் மோடி காணொளியில் துவக்கியதும் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சதுப்பு நில காடுகள் உருவாக்க மாங்ரோவ் மரக்கன்றுகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நட்டார்.

கடல் அரிப்பு, கடலோர சுற்றுச்சூழல், இயற்கை பேரிடரில் இருந்து கடலோர பகுதிகளை பாதுகாக்கும் அரணாக உள்ள சதுப்பு நில காடுகளை உருவாக்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இத்திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கினார்.

இதைடுத்து நேற்று ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகாலில் 300 ஏக்கர் கடலோர பகுதியில் சதுப்பு நில காடுகளின் மரக்கன்றுகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் நட்டு துவக்கி வைத்தார்.

மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, வனசரக அலுவலர்கள் மகேந்திரன், கவுசிகா, வனவர்கள் தேவகுமார், கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

*முதுகுளத்தூர் அருகே கீழ காஞ்சிரங்குளம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

கீழ காஞ்சிரங்குளம் சரணாலயத்தில் உதவி வனப்பாதுகாவலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வனக்குழு தலைவர் தர்மராஜ் பாண்டியன், ஊராட்சி தலைவர் சண்முகவள்ளி, முன்னிலை வகித்தனர்.

டில்லியில் பிரதமர் மோடி பேசியது கிராம மக்கள் முன்னிலையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதே போல் சித்திரங்குடி சரணாலயத்தில் நடந்தது.

ராமேஸ்வரம்--பிரதமர் மோடி காணொளியில் துவக்கியதும் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சதுப்பு நில காடுகள் உருவாக்க மாங்ரோவ் மரக்கன்றுகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நட்டார்.கடல் அரிப்பு, கடலோர

மூலக்கதை