ஆவினுக்குள் சுற்றும் தனியார் வாகனங்களில் அள்ளிட்டு போறாங்க'; நெய், பால் திருட்டு நடப்பதாக குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
ஆவினுக்குள் சுற்றும் தனியார் வாகனங்களில் அள்ளிட்டு போறாங்க; நெய், பால் திருட்டு நடப்பதாக குற்றச்சாட்டு



மதுரை -மதுரை ஆவின் வளாகத்திற்குள் தடையை மீறி தனியார் வாகனங்கள் வலம் வருவதாகவும், அவற்றில் நெய், பால் திருட்டு நடப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆவின் வளாகத்திற்குள் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் வேன், கார்கள், கட்சிக் கொடியுடனும் வந்த பல மணிநேரம் வளாகத்திற்குள் நிறுத்துகின்றனர். குறிப்பாக நெய் இருப்பு வைக்கப்படும் அறை அருகே தான் நிறுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் நெய் பாட்டில்கள், பால் பாக்கெட்டுகள் திருடப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

ஊழியர்கள் கூறியதாவது: கட்சி கொடிகள் கட்டிய கார்கள் உள்ளே வரும்போது எவ்வித பதிவும் செய்வதில்லை. அதுபோல் ஆவின் வாகனங்கள் வெளியேறும்போது அனைத்து பகுதிகளிலும் சோதனையிட்ட பின்னரே வெளியேற அனுமதிக்கப்படும். ஆனால் தனியார் வாகனங்கள் பின் பகுதியாக அனுப்பி விடுகின்றனர். இதை பயன்படுத்தி நெய், பால் பாக்கெட்டுகளை அவர்கள் அள்ளிச்செல்கின்றனர். இதனால் ஆவினுக்கு இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு பொது மேலாளர் சாந்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றனர்.

மதுரை -மதுரை ஆவின் வளாகத்திற்குள் தடையை மீறி தனியார் வாகனங்கள் வலம் வருவதாகவும், அவற்றில் நெய், பால் திருட்டு நடப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.ஆவின் வளாகத்திற்குள் தனியார்

மூலக்கதை