ஒரு லட்சம்! ஆடைக்கு பிரிண்டிங் செய்யலாம் ..... விரைவில், பொது பயன்பாட்டு மையம்

தினமலர்  தினமலர்
ஒரு லட்சம்! ஆடைக்கு பிரிண்டிங் செய்யலாம் ..... விரைவில், பொது பயன்பாட்டு மையம்

திருப்பூர் : திருப்பூர் தொழில்பாதுகாப்புக்குழுவின், 'அப்பேரல் கிளஸ்டர்' பொது பயன்பாட்டு மைய கட்டுமான பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ளன. இம்மாதம் பணிகள் முழுமை பெறுவதையடுத்து, அதிநவீன பிரின்டிங் மெஷின் கொள்முதலுக்கு கமிட்டி அமைக்கப்படுகிறது.

பின்னலாடை உற்பத்தி துறையில் மதிப்பு கூட்டுதலை அதிகரிப்பதற்காக, திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு, குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்களை இணைத்து, 'அப்பேரல் கிளஸ்டர்' என்ற பெயரில் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கிவருகிறது.இந்த திட்டத்தில், 50 பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கரம்கோர்த்துள்ளன. 16.50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு, மத்திய அரசு 8.55 கோடி; மாநில அரசு 3 கோடி ரூபாய் மானியம் வழங்குகின்றன; தொழில் குழுமத்தினர், 5 கோடி ரூபாய் முதலீடு செய்கின்றனர்.

திருப்பூர் - தாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், 2 ஏக்கர் நிலம் குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்ததையடுத்து, கடந்த ஜன., மாதம், 40 ஆயிரம் சதுர அடியில், பொது பயன்பாட்டு மைய கட்டுமான பணிகள் துவங்கின.இதுகுறித்து, 'அப்பேரல் கிளஸ்டர்' நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம் கூறியதாவது:இந்த மையத்தில், அதிநவீன டிஜிட்டல், எம்ப்ராய்டரி பிரின்டிங், ஓவல், ரவுண்ட் பிரின்டிங், டிஜிட்டல் செஸ்ட் பிரின்டிங், சப்ளிமேஷன் பிரின்டிங், லேபிள் பிரின்டிங் மெஷின்கள் நிறுவப்பட உள்ளன; ஆய்வகம், திறன் பயிற்சி மையம், தொழிலாளர் தங்கும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.தற்போது, கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன; இம்-2ம் பக்கம் பார்க்க

மூலக்கதை