மீண்டும் நயன்தாராவின் பெயரை கூறி சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் வனிதா!
எப்போதுமே தமிழ் சினிமாவில் சர்ச்சை விஷயங்கள் பல ஓடிக்கொண்டிருந்தாலும் அண்மையில் அதிக சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர் நடிகை வனிதா விஜயகுமார். ஏற்கனவே இவர் 3 திருமணங்களை செய்துகொண்ட நிலையில் தற்போது இவர் 4 இல்ல 40 கல்யாணம் செய்வேன் என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அண்மையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறி அதன் காரணத்தை பிரஸ்மீட் மூலம் தெளிவு படுத்தினார். இந்நிலையில் தற்போது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் Pick Up Drop என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான போட்டோஹூட் எடுக்கப்பட்டும் பவர் ஸ்டாருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது.
இந்நிலையில் சமீபத்தில், பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பெண்கள் எப்படி வாழவேண்டும் எப்படி சாதித்து வருகிறார்கள் என்று கூறி பேசியுள்ளார். மேலும், பெண்கள் முன்னேற்றம் பாதுகாப்பு ரொம்ப முக்கியம், தைரியமாக இருந்து அதை தாண்டி வரவேண்டும் என்றும், ஆரம்ப கால தமிழ் சினிமாவில் பெண்கள் 4 காட்சிகளில் மட்டும் வந்து போவார்கள். ஆனால் தற்போது முக்கிய கதாபாத்திரமும் லீட் ரோலிலும் நடித்து வருகிறார்கள். நயன்தாராவை நினைத்து பெருமைபடுகிறேன் அவர் இந்த நிலையில் இருப்பதால். மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு நான் ரீஎண்ட்ரி கொடுத்து வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
