வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் சென்னை மாநகராட்சி: பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. மேலும் வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்கள் அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருதுகிறது. அதைப்போன்று சென்னையிலும் மழை பெய்து வருவதால் சாலைகள், சுரங்கபாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திக்குள்ளாகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுரங்கப்பாதைகள், ஏரிகள் மழைநீர் தேங்காமலும், கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மழையின் அளவை தொடர்ந்து கண்காணித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை முழுவதிலும் 30 இடங்களில் மழையின் அளவைக் கண்காணிக்கும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதைப்போன்று சுரங்கப்பாதைகள், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ள அளவை கண்காணிக்கும் 40 சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வெள்ள பாதிப்பு இந்த கட்டுப்பாடு மையத்தில் 60 ஊழியர்கள் சுழற்சி முறையில் 3 ஷிப்ட்களாகப் பிரிந்து 24 மணி நேரமும் சென்சார் கருவிகளை கண்காணித்து வருகின்றனர்.
மழையின் காரணமாக, சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில், நீரின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும் போது குறிப்பிட்ட மண்டலத்தின் முதன்மை அலுவலருக்கு ஒரு தன்னியக்க எச்சரிக்கை குறுஞ்செய்தியைப் பகிரும் அதைத்தொடர்ந்து அந்த மண்டல அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அதற்காக 570 மோட்டார்கள் மற்றும் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நகரின் முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்து செயல்படும் கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்துடன் இணைந்து தொலைபேசி உதவி எண்கள் வழியாக பொதுமக்கள் நேரடியாக மாநகராட்சியைத் தொடர்பு கொண்டு, மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய பேரிடர் மேலாண்மைப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
மேலும் மழையால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில் 044-25619204, 25619206, 25619207, 25619208 என்ற தொலைபேசி எண்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
