கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் 5 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு: 27 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் 5 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு: 27 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்ளுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது. இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

கன மழை காரணமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுவடைந்து மேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு அரபிக்கடல் நோக்கி செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களில் மிக கனமழையும், கனமழையும் பெய்து வருகிறது. கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, வேலூர், திருவாரூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.



மேலும் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவும் விடிய விடிய மழை பெய்தது.

அதைத் தொடர்ந்து இன்றும் விட்டு விட்டு மழை பெய்யும்.

 அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடலுக்கு நகர்ந்து செல்லும்.

அடுத்த 2 நாட்களுக்கு கடலோர ஆந்திர மற்றும் கேரள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை