பெட்ரோல், டீசல் விலை இன்றும் 30, 34 காசு உயர்வு: ஒரு மாதத்தில் பெட்ரோல் ரூ6.46 அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல், டீசல் விலை இன்றும் 30, 34 காசு உயர்வு: ஒரு மாதத்தில் பெட்ரோல் ரூ6.46 அதிகரிப்பு

சேலம்; பெட்ரோல், டீசல் விலை இன்றும் 30, 34 காசுகள் உயர்ந்திருக்கிறது. ஒரு மாதத்தில் பெட்ரோல் ரூ6. 46 அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் 87 டாலரை தாண்டி உள்ளது.

இதனால் இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இன்றும் பெட்ரோல் 30 காசும், டீசல் 34 காசும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ105. 74க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 30 காசுகள் அதிகரித்து ரூ106. 04க்கும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ102. 26க்கும் விற்பனையாகிறது.

சேலத்தில் இன்று பெட்ரோல் 30 காசு அதிகரித்து ரூ106. 36க்கும், டீசல் 34 காசு அதிகரித்து ரூ102. 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே மாதத்தில் பெட்ரோல் ரூ6. 46ம், டீசல் ரூ7. 52ம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், லாரி வாடகை, ஆட்டோ கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


.

மூலக்கதை