ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ரஜினிகாந்த், நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்துக்கு எம். ஆர். ஐ.

ஸ்கேன் உடன்  முழு உடல்நலன் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மற்ற மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.



இது குறித்து குடும்பத்தினர் கூறும்போது, ‘ரஜினி நலமாக இருக்கிறார். நன்றாக தூங்கினார்.

குடும்பத்தினருடன் பேசினார். விரைவில் அவர் வீடு திரும்புவார்’ என்றனர்.

கடந்த ஆண்டு ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது, அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் நலத்துடன் வீடு திரும்பினார்.

ஆனால் இப்போது அவருக்கு உடல் நல பிரச்னை எதுவும் இல்லை என்றும் மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

.

மூலக்கதை