ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ரஜினிகாந்த், நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்துக்கு எம். ஆர். ஐ.
ஸ்கேன் உடன் முழு உடல்நலன் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மற்ற மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து குடும்பத்தினர் கூறும்போது, ‘ரஜினி நலமாக இருக்கிறார். நன்றாக தூங்கினார்.
குடும்பத்தினருடன் பேசினார். விரைவில் அவர் வீடு திரும்புவார்’ என்றனர்.
கடந்த ஆண்டு ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது, அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் நலத்துடன் வீடு திரும்பினார்.
ஆனால் இப்போது அவருக்கு உடல் நல பிரச்னை எதுவும் இல்லை என்றும் மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
