காஞ்சி. மாவட்டத்தில் 361.91 கோடியில் நலத்திட்ட பணிகள்: முதல்வர் எடப்பாடி இன்று துவக்கி வைக்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சி. மாவட்டத்தில் 361.91 கோடியில் நலத்திட்ட பணிகள்: முதல்வர் எடப்பாடி இன்று துவக்கி வைக்கிறார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 361. 91 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில், கீழ்கதிர்பூர் கிராமத்தில் ரூ. 190. 08 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க உள்ளார்.

மேலும் பொதுப்பணித்துறை சார்பில் தலா ரூ. 3. 05 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம், பெரும்புதூர் தாலுகா அலுவலக கட்டிடங்கள், உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி மற்றும் பெரும்புதூரில் ரூ. 0. 17 கோடி திட்ட மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய ஆர். ஐ. அலுவலக கட்டிடம், மாடம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ. 1. 80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் என ரூ. 198. 12 கோடி மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

 இதையடுத்து, பல்வேறு இடங்களில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறையால் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.

பொதுப்பணித்துறை சார்பில் சாலை அமைக்கும் பணி, அகலப்படுத்துதல், குளம் தூர்வாரி சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மொத்தத்தில் ரூ. 260. 46 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும், ரூ. 29. 42 கோடி மதிப்பிலான கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 72. 03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்க உள்ளார்.

 

அதிகாரிகள் உடனான ஆய்வு கூட்டத்திற்கு பிறகு விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், திட்ட அலுவலர் தர், சார் ஆட்சியர் சரவணன், போலீஸ் எஸ்பி சண்முகப்பிரியா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறையினர் செய்து வருகின்றனர்.



பொன்னேரிக்கரையில் வரவேற்பு
கொரோனா தடுப்பு பணி ஆய்வு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில், அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தும் அடிக்கல் நாட்டுவதற்கும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலகம், காமராஜர் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் தடுப்பு அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



வரவேற்பு நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட ஜெ. பேரவை செய லாளர் கே. யு. எஸ். சோமசுந்தரம், அதிமுக மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம், ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், நகர செயலாளர் என். பி. ஸ்டாலின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

.

மூலக்கதை