ஜெ.வின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ரூ68 கோடி டெபாசிட்: நீதிமன்றத்தில் கட்டியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெ.வின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ரூ68 கோடி டெபாசிட்: நீதிமன்றத்தில் கட்டியது

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ரூ. 68 கோடியை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு மரணம் அடைந்தார்.   இதனையடுத்து, அவரது சொத்துகளை கைப்பற்ற பல்வேறு தரப்பினரும் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் தோட்ட, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தீபக், தீபா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே வேதா நினைவில்லமாக மாற்றும் அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தீபக், தீபா ஆகியோர் வேதா இல்லத்தில் உரிமை கோரி வந்த நிலையில், ஜெயலலிதாவின் வருமானவரி தொகை ரூ. 36. 9 கோடியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டது.

ஆனால் அதனை இடத்திற்கு உரிமை கோரிய யாரும் செலுத்தவில்லை.   மேலும் அரசு நிலத்தை கையகப்படுத்துவதற்கு இழப்பீடு பெற அறிவித்திருந்தது. இருந்தும் யாரும் உரிமை கோரவில்லை.

இந்தநிலையில், போயஸ் தோட்ட வேதா இல்லம் 24,322 சதுர அடி நிலத்தை அரசு கையகப்படுத்த அதிகாரிகள் அளவீடு செய்தனர்.

மேலும் இழப்பீடு பெற யாரும் வராததாலும், உரிமை கோராததாலும்.

ஜெயலலிதா வருமான வரித்துறைக்கு செலுத்தாமல் இருக்கும் பாக்கி ரூ. 36. 9 கோடி, மற்றும் நிலம் வீட்டின் தொகை சதுர அடி ரூ. 12,060  என கட்டிட மதிப்பு ரூ. 2. 7 கோடியுடன் சேர்த்து ரூ. 29. 3 கோடி என வேதா நிலைய தோட்டத்திற்கு ரூ. 33 கோடியை சேர்த்து ரூ. 67. 9  கோடி என  ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது.

இதன்மூலம் தமிழக அரசு வேதா இல்லத்தை நினைவிடமாக்க அடுத்தடுத்து நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா போயஸ்கார்டன் இல்லத்தில்தான் தங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென்று அந்த வீட்டை வாரிசுகள் உரிமை கொண்டாடினர். பின்னர் நீதிமன்றமும் அவர்களை வாரிசு என்று அறிவித்தது.

இப்போது தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது.

இதனால் போயஸ்தோட்டம் குறித்து அடுத்தடுத்து தமிழக அரசின் நடவடிக்கைகள் தீவிரமாகுவதால், தேர்தலுக்கு முன்னரே போயஸ் வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

.

மூலக்கதை