ஜம்மு காஷ்மீரில் வீரமரணம்; தமிழக ராணுவ வீரர் உடல் வருகை: இன்று மாலை இறுதி சடங்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜம்மு காஷ்மீரில் வீரமரணம்; தமிழக ராணுவ வீரர் உடல் வருகை: இன்று மாலை இறுதி சடங்கு

இடைப்பாடி: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் வீரமரணமடைந்த இடைப்பாடி ராணுவ வீரரின் உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள சித்தூர் ஊராட்சி வெத்தலைகாரன்காடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40).

இவர் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்தபோது, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் மதியழகன் வீரமரணமடைந்தார்.



அவருக்கு தமிழரசி (33) என்ற மனைவியும், 12 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். வீரமரணம் அடைந்த மதியழகனின் உடல் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான வெத்தலைகாரன்காட்டிற்கு மாலை 4 மணிக்கு வருகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் மதியழகன் இறுதிச்சடங்கு நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீசாரும் ராணுவ அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.

.

மூலக்கதை