டாஸ்மாக், ஓட்டல்கள், கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நூலகங்களை திறக்க அரசு நடவடிக்கை: இளைஞர்கள், மாணவர்கள் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டாஸ்மாக், ஓட்டல்கள், கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நூலகங்களை திறக்க அரசு நடவடிக்கை: இளைஞர்கள், மாணவர்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மூடப்பட்ட கிளை நூலகங்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை மீண்டும் திறக்க வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்குட்பட்டு 526 ஊராட்சிகள் உள்ளன.

இவைகளில் 2011ம் ஆண்டு திமுக ஆட்சியில் கிராம நுாலகங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை பராமரிப்பின்றி மூடப்பட்டன.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு, அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களும், கிளை நூலகங்களும் தப்பவில்லை. அனைத்து நூலகங்களையும் அரசு மூட உத்தரவிட்டது.



இதனால், கிராம மற்றும் கிளை நூலகங்களுக்கு வரும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு எழுதுவோர், அன்றைய நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள், ஏ. சி இல்லாத நகை கடைகள், ஜவுளி கடைகள், பேக்கரிகள் என படிப்படியாக கடைகள் திறக்கப்பட்டது.

ஆனால், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில், நூலகங்களை திறக்க எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

எனவே, இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி, அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம நூலகங்களை புனரமைக்கவும், ஊரடங்கு தளர்வால் மூடப்பட்ட கிளை நுாலகங்களை மீண்டும் திறக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை