சென்னையில் கொரோனா பரவல் எதிரொலி: 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தீவிரம்: 15 மண்டலங்களில் 12 இடங்களில் கிளினிங் சென்டர் அமைக்கப்படுகிறது: மாநகராட்சி கமிஷனர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் கொரோனா பரவல் எதிரொலி: 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தீவிரம்: 15 மண்டலங்களில் 12 இடங்களில் கிளினிங் சென்டர் அமைக்கப்படுகிறது: மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகளில் 2 முகாம் என 400 காய்ச்சல் முகாம் ஆரம்பித்து விடுவோம். 75% கோவிசீல்டு, 25% கோவேக்சின் இதுவரை போடப்பட்டுள்ளது.

இதுவரை 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள காய்ச்சல் முகாம்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: சளி, காய்ச்சல், தலைவலி, இருமல், நாக்கில் சுவையில்லாமல் இருப்பது, உடல்சோர்வாக இருப்பது, வாசனை இல்லாமல் இருப்பது, வயிற்றுப்ேபாக்கு இருப்பது அனைவருக்கும் தெரியும்.

அது மாதிரியானதை முன்களப்பணியாளர்கள் வீடு, வீடுகளுக்கு முன்பு குறித்து வைத்துக் கொள்கின்றனர். அறிகுறிகள் இல்லாமல் இருப்பதை கண்டறிய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிய கருவிகள் உள்ளது.   அதில் ஏதாவது அறிகுறிகள் இருந்தால் அந்த பகுதிகளில் நடைபெறும் மினி கிளினிக் அனுப்பி வைக்கின்றனர்.



அங்கே அவர்களை சோதனை செய்து அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்புவது மற்றும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வது போன்றவை கடைப்பிடிக்கிறது. மினி கிளினிக் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்ற அறிகுறிகளை கண்டுபிடிக்கும் வகையில் கருவிகள் உள்ளது. விரல்களில் மாட்டிவிட்டு ஒரு பட்டனை அழுத்தினால் ேபாதும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரியும், அது போன்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருவிகள் உள்ளது.

முன்களப்பணியாளர்களிடம் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ேபாதும் 90 சதவீதம் தகவல்கள் வந்துவிடும்.

இதுவரை 8 ஆயிரம் பேர்பணிக்கு வந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இந்த வாரம் வரும் நிலையில் 12 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.

காய்ச்சல் முகாம் ஏற்கனவே 50 ஆரம்பித்தோம். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் 200 வார்டுகளில் 2 முகாம் என 400 காய்ச்சல் முகாம் ஆரம்பித்து விடுவோம்.

கடந்த ஆண்டும் இதே போல் முகாம்கள் அமைத்து செயல்பட்டதால் தான் கட்டுக்குள் வந்தது.   அதை முறையை தான் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு அனைவரும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் கவனம் செலுத்தி பார்க்க முடியாது என்பதால் சென்னையில் 15 மண்டலங்களில் 12 இடங்களில் கிளினிங் சென்டர் அமைக்கப்பட்டு வருகிறது.



வெள்ளிக்கிழமைகளுக்குள் 12 சென்டர்கள் கொண்டு வந்து விடுவோம். ஒரு மண்டலத்தில் 200 பேருக்கு தொற்று வருகிறது என்றால் அந்த சென்டருக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்து வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாம், முகாம்களில் சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் பிரித்து அனுப்பப்படும்.

அதனால் மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். கோவிட் கேர் சென்டர் வீட்டில் தனி அறை இருந்தால் வீட்டில் தனிமைபடுத்தி கொள்ளலாம்.

இல்லையென்றால் கோவிட் கேர் சென்டர் தயார் செய்துள்ளோம். அதாவது கல்லூரி, வணிகவளாகங்களில் தற்காலிக மருத்துவமனையாக அமைத்துள்ளோம்.

அதில் ஆயிரம் படுக்கைகள் முதல் இருக்கும், 5  ஆயிரம் படுக்கைகள் உள்ள கோவிட் ேகர் சென்டர் உள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் கோவிட் கேர் சென்டர் அமைத்துள்ளோம்.

அதன்படி 12,500 படுக்கைகள் தயார் செய்துள்ளோம்.

கடந்த ஆண்டு 22,500 படுக்கைகள் இருந்தது தற்போது இல்லாததற்கு காரணம் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ளது.

அதனால் அங்கே தயார் செய்யமுடியில்லை. கோவிட் கேர் சென்டரில் படுக்கைகள் இல்லாத நிலை வராது.

அதுபோக தனியார் மருத்தவமனைகளிலும் உள்ளது. அனைத்து மருந்துகளும்போதுமான அளவு உள்ளது.

புதிதாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 80 லட்சம் பேர் உள்ளனர்.

அதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 22 லட்சம் பேர் உள்ளனர். அதில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

10-15 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது.

சென்னையில் 450 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் அப்பார்ட்மெண்டில் வந்தும் மருத்துவர்கள் தடுப்பூசி போடப்படும். எந்த விதமான தயக்கம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் சோதனை செய்த பிறகு தான்தடுப்பூசி போடப்படும். 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது என்பது மிகப்பெரியது.

மாநகராட்சி, அரசு மருத்துவமனை உள்ள அனைத்து இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும்.

அதற்கு ரூ. 250 செலுத்த வேண்டும். தேவைப்படுகிறவர்கள் செலுத்திக் கொள்ளலாம்.



இதுவரை 10 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். முகக்கவசம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோ அதைப்போன்று தடுப்பூசி பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

10-15 லட்சம் வேக்சின் உள்ளது. வார வாரம் தடுப்பூசி வந்து கொண்ேட தான் இருக்கிறது.

இதுவரை 10 லட்சத்து 9 ஆயிரத்து 715 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் கோவிசீல்டு 7 லட்சத்து 57 ஆயிரத்து 516 அதாவது 75% கோவிசீல்டு போடப்பட்டுள்ளது.

2 லட்சத்து 52 ஆயிரத்து 199 பேருக்கு 25% கோவேக்சின் போடப்பட்டுள்ளது. இரண்டு வேக்சின் சிறப்பானது தான் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை