கொண்டாட்டம்! புதுச்சேரியில் குடியரசு தின விழா...கவர்னர் தேசியக் கொடி ஏற்றினார்

தினமலர்  தினமலர்
கொண்டாட்டம்! புதுச்சேரியில் குடியரசு தின விழா...கவர்னர் தேசியக் கொடி ஏற்றினார்

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த குடியரசு தினவிழாவில் கவர்னர் கிரண்பேடி தேசியக் கொடி ஏற்றினார்.புதுச்சேரி அரசு சார்பில், குடியரசு தின விழா உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு வந்த கவர்னர் கிரண்பேடியை தலைமைச் செயலர் அஸ்வனிக்குமார், டி.ஜி.பி., ரன்வீர் சிங் கிருஷ்ணியா ஆகியோர் வரவேற்று விழா மேடைக்கு அழைத்து வந்தனர். தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய கவர்னர், திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.ஜனாதிபதி பதக்கம்மேடைக்கு திரும்பிய கவர்னர், மிகச் சிறந்த பணிக்காக வழங்கப்படும் ஜனாதிபதி பதக்கத்தை, சப் இன்ஸ்பெக்டர் ஜானகி, சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஆகியோருக்கு வழங்கினார்.

தொடர்ந்து போலீசார், ரிசர்வ் பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர், முன்னாள் ராணுவத்தினரின் அணிவகுப்பு நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, மாணவ மாணவிகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், அலங்கார வண்டிகள் அணிவகுப்பு போன்றவை இடம் பெறவில்லை.அமைச்சர்கள் ஆப்சென்ட்விழாவில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் மட்டும் பங்கேற்றனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வரவில்லை.கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் உட்கார ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருந்தபோதும், பார்வையாளர்கள் அதிகளவில் வரவில்லை. பார்வையாளர்கள் மாடம் வெறிச்சோடியது. விழா பந்தலில் நாற்காலிகளும் காலியாக இருந்தன.

மூலக்கதை