பூம்புகார் கிராமம் மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் மாற்றம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

பூம்புகார் கிராமம் மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் மாற்றம்

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரின் சங்ககால பெயர் ‘காவிரிப் பூம்பட்டினம்’ என்பதாகும். காவிரி நதியானது இங்குள்ள கடலில் சங்கமிப்பதால் ‘காவிரி புகும் ஆறு’ என்று பெயரிடப்பட்டு, பிறகு அப்பெயரானது மருவி ‘காவிரிப் பூம்பட்டினம்’ என்றானது. ஆனால் 6ம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் வணிகமயமாக விளங்கிய இந்நகரம் ‘பூம்புகார்’ என்றும், அதற்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘கீழையூர்’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சங்க கால சிறப்புப் பெயரான ‘காவிரிப் பூம்பட்டினம்’ என்ற பெயரே தங்களது ஊருக்கு வேண்டுமென்று அவ்வு+ர் மக்கள் மூன்று தலைமுறைகளாகத் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இக்கிராமத்திற்குப் பணி மாறுதலில் வந்த கிராம நிர்வாக அலுவலரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற வி.ஏ.ஓ. மணிமாறன் முயற்சியில் மயிலாடுதுறை மாவட்ட எல்லை வரையறை தொடர்பான கருத்துக் கேட்பின் போது பூம்புகார் மக்களின் பெயர் மாற்றக் கோரிக்கையை வரலாற்று ஆவணங்களுடன், அனைத்துத் தகவல்களையும் முன்வைத்தார். அதன் பேரில் கடந்த 28ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பின் போது கீழையூர் கிராமத்தின் பெயரும் 6ம் நூற்றாண்டின் வழக்கத்தின் பேரில் காவிரிப்பூம்பட்டினம் என்று மாற்றப்படுவதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இவ்வரசாணையைக் கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

மூலக்கதை