மணக்கிறது மெட்ரோ! 136 கி.மீ.,தூரம் செயல்படுத்த திட்டம்:சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்

தினமலர்  தினமலர்
மணக்கிறது மெட்ரோ! 136 கி.மீ.,தூரம் செயல்படுத்த திட்டம்:சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்

கோவை:கோவை மாநகரில், நான்கு வழித்தடங்களில் 136 கி.மீ., நீளத்துக்கு, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்' என்று தமிழக முதல்வர், 2017ல் சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, 'சிஸ்ட்ரா' என்ற சர்வதேச நிறுவனம், மத்திய அரசுக்கு சொந்தமான 'ரைட்ஸ்' நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனத்தினர், தங்களது ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். நான்கு வழித்தடங்களில், 136 கி.மீ., நீளத்துக்கு, மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் வகையில், அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
உக்கடத்தில் இருந்து கணியூர் வரை 26 கி.மீ., உக்கடத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளீச்சி வரை 24 கி.மீ., தடாகம் சாலை, தண்ணீர் பந்தல் முதல் கருமத்தம்பட்டி வரை 42 கி.மீ., காருண்யா நகர் முதல் அன்னுார் கணேசபுரம் வரை 44 கி.மீ.,என, நான்கு உத்தேச வழித்தடங்களில், திட்டத்தை செயல்படுத்தலாம் என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையம் எங்கே?கோவை மாநகரின் பிரதான இடத்தில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க, உத்தேசிக்கப்பட்டுள்ளது. உத்தேச வழித்தடங்களை பரிசீலித்து கருத்துக்களை தெரிவிக்கும்படி, அரசின் வெவ்வேறு துறையினரும், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, மாநகராட்சி உள்ளிட்ட அரசு துறையினர், திட்ட வழித்தடங்களில் எதிர்காலத்தில், ஏதேனும் வளர்ச்சிப்பணி மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்று கருத்து கோரப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கை தாக்கல்இந்த கருத்துக்களை பெற்று, பரிசீலித்த பின், தேவையான மாற்றங்கள் செய்து, திட்ட வழித்தடம் இறுதி செய்யப்படும். சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுவனம் தான் கோவையிலும், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதை பரிசீலித்து அரசு உறுதி செய்தால், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு, உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்றனர்.உக்கடத்தில் இருந்து கணியூர் வரை 26 கி.மீ., உக்கடத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளீச்சி வரை 24 கி.மீ., தடாகம் சாலை, தண்ணீர் பந்தல் முதல் கருமத்தம்பட்டி வரை 42 கி.மீ., காருண்யா நகர் முதல் அன்னுார் கணேசபுரம் வரை 44 கி.மீ.,என, நான்கு உத்தேச வழித்தடங்களில், திட்டத்தை செயல்படுத்தலாம் என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை