நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனம்: மாதவரம், பொன்னேரி சாலையை டிராபிக் போலீசார் சீரமைத்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனம்: மாதவரம், பொன்னேரி சாலையை டிராபிக் போலீசார் சீரமைத்தனர்

திருவொற்றியூர்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சித்தால் மாதவரம், பொன்னேரி நெடுஞ்சாலையை போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர். சென்னை மாதவரம் 200 அடி சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

ஆனால் இந்த சாலை குண்டும் குழியுமாக மாறியதால் வாகனங்கள் செல்வதற்கு கடும் சிரமப்படுகிறது. சாலையில் உள்ள பெரிய பள்ளத்தில் இறங்கும்போது பைக்கில் செல்பவர்கள் விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.



இந்தநிலையில், மாதவரம் சரக போக்குவரத்து உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் எழிலன், விஸ்வநாதன் மற்றும் போலீஸ்காரர்கள் ஜானு, இப்ராஹிம், காமராஜ், ஜீவா, சங்கர், ஜெயக்குமார், சசி, பிரதாபன் ஆகியோர் சேர்ந்து மாதவரம், பொன்னேரி நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களில் கான்கிரீட் கலவை கொட்டி சீரமைத்தனர்.

இந்த பணியை சேர்ந்த போக்குவரத்து போலீஸ்காரர்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சமூகநல ஆர்வலர்கள் பாராட்டினர்.

.

மூலக்கதை