மணலி காவல் நிலையத்தில் ரகளை சட்டக் கல்லூரி மாணவன் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
மணலி காவல் நிலையத்தில் ரகளை சட்டக் கல்லூரி மாணவன் கைது

திருவொற்றியூர்: மணலி காவல்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவரை கைது செய்தனர். திருவள்ளூரை சேர்ந்தவர் செல்வி.

இவரது மகன் அசோக் (22). இவருக்கு மணலியில் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்தனர்.

இவர்களுக்கு அடுத்தமாதம் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகை, ரொக்கம் தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து மணலி போலீசில் செல்வி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இரண்டு தரப்பினரையும் காவல்நிலையம் அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர்.

இதில் சுமூகமுடிவு எட்டப்படவில்லை. இதனால் இரு தரப்பினரும், ‘’எங்களது  பிரச்னையை நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்கிறோம்’’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

இதனிடையே நேற்று முன்தினம் அசோக்கின்  நண்பரும் ஆந்திராவில் வக்கீலுக்கு படித்து வருபவருமான நித்யானந்தன் (29) என்பவர்  மணலி காவல் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்த போலீசாரிடம், ‘ செல்வி கொடுத்த புகார் மனுவை சரியாக  விசாரிக்கவில்லை” என்று கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அங்கிருந்த ஏட்டுவிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக  தெரிகிறது.

இதனால் வக்கீல் நித்யானந்தனை போலீசார் கைது செய்தனர்.

.

மூலக்கதை