குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

குன்றத்தூர்: குன்றத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு, டெங்கு நோய் தடுப்பு மற்றும் ஏடிஸ் கொசு ஒழிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று  நடந்தது.

பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணி, குன்றத்தூர் பஸ் நிலையம், முருகன் கோயில் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள், குப்பைகளை தரம் பிரித்து குப்பை தொட்டியில் இட வேண்டும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும், வீட்டிற்கு 2 மரம் வளர்க்க வேண்டும், பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற  விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்து கூறி பிரசாரம் செய்தனர்.

பேரணியை துவக்கி வைத்த குன்றத்தூர் செயல் அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், குன்றத்தூர் பகுதிகளில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது.

இதன் மூலம் மழைக்காலங்களில்  நோய்கள் பரவாமல் தடுக்கப்படுவதுடன்,  மக்களின் ஆரோக்கியம் காக்கப்படும்.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.

.

மூலக்கதை