மத்திய அரசுக்கு அஞ்சி தோப்புகரணம் போடும் தமிழக அரசு: வைகோ தாக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசுக்கு அஞ்சி தோப்புகரணம் போடும் தமிழக அரசு: வைகோ தாக்கு

நாங்குநேரி: நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நாங்குநேரி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க யாரும் வருவதில்லை.

பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்குச் சென்று விட்டன. 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதாகவும் இரு உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தியதாகவும் அரசு கூறுகிறது.

ஆனால், 90 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.

ரயில்வே, மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு பெரும்பாலான வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு முதுகெலும்பற்ற அரசு. அஞ்சி நடுங்கி மத்திய அரசுக்கு தோப்புக்கரணம் போடுகிற அரசு.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் நஞ்சை நிலங்கள் பறி போகும் ஆபத்து உள்ளது. மேகதாதுவில் நிச்சயமாக அணையைக் கட்டி விடுவார்கள்.

தஞ்சை பஞ்சப்பிரதேசம் ஆகிவிடும்.

.

மூலக்கதை