திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று நிறைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று நிறைவு

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில், நவராத்திரி விழா 28ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று கோயில் கவுரவ ஏஜென்ட் சி. சி. சம்பத்  தலைமையில், ரம்யா வாசுதேவன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர்  விழாவை துவக்கி வைத்தனர். வீரராகவப் பெருமாளின் முழு அவதாரமும், கிருஷ்ணரின் முழு அவதார பொம்மைகளும், ராமானுஜரின் சிலையும்  கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.

தினமும், காலையில் பெருமாள், தாயார் திருமஞ்சனமும், மாலையில் பெருமாள், தாயார், தேசிகன் சடகோப சாமி  உள்புறப்பாடு நடந்தது. தினசரி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பரதநாட்டியமும், நாடகங்களும், சிறப்பு சொற்பொழிவுகளும், பஜனைகளும்,  கிரேசி கிரியேஷன்ஸ் வழங்கும், மது பாலாஜியின் மீசை ஆனாலும் மனைவி, மது பிளஸ் 2 என்ற காமெடி நாடகங்களும்,  நடைபெற்றது.

விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், இந்திரா கல்விக்குழும தலைவர் வி. ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ,  வணிகவரி துறை இணை ஆணையர் சுந்தரவல்லி, ஆர். எம். ஜெயின் பள்ளி குழுமங்களின் தாளாளர் என். சி. ஸ்ரீதரன், ஸ்ரீநிகேதன் பள்ளி இயக்குனர்  பரணிதரன், அகோபில மட ஸ்ரீகார்யம் பத்மநாப ஆச்சார்யார், ஏபிஎஸ் பள்ளி குழும தலைவர் எஸ். ரமேஷ் சுப்பிரமணியன், ஞானவித்யாலயா பள்ளி  தாளாளர் ஏ. லாலு ஆகியோர், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.

கலை நிகழ்ச்சிகளில்  பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிறைவு நாளான நேற்று சுமங்கலிகளுக்கு வீரராகவ பெருமாள் படத்துடன் மாங்கல்ய கயிறு  வழங்கப்பட்டது.

.

மூலக்கதை