காஞ்சிபுரம் அருகே கோழி பண்ணையில் பதுக்கிய 423 கேன் எரிசாராயம் பறிமுதல்: உரிமையாளர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சிபுரம் அருகே கோழி பண்ணையில் பதுக்கிய 423 கேன் எரிசாராயம் பறிமுதல்: உரிமையாளர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோழி பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 423 கேன் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் சாலையில் ஆர்ப்பாக்கம் ஏரி அருகே மினி வேன் கவிழ்ந்து கிடப்பதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர்.

மினி வேனில் எரிசாராயம் இருப்பது தெரிந்தது. மொத்தம், 32 கேன்களில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிசாராயம் இருந்தன.

இதையடுத்து, எரிசாராய கேன்களை பறிமுதல் செய்து மாகரல் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், காஞ்சிபுரம் மார்க்கமாக வந்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததும், வேன் டிரைவர் தப்பி ஓடியதும் தெரிந்தது.

மேலும், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சிலர், எரிசாராய கேன்களை எடுத்து சென்றதும் தெரியவந்தது.

போலீசார் வழக்கு பதிவு செய்து எரிசாராயம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யார் கடத்தி வந்தார்கள், எங்கு கடத்தி செல்லப்படுகிறது என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்பேரமநல்லூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை 5 மணிக்கு மேல்பேரமநல்லூருக்கு சென்று ரமேசின் கோழிப்பண்ணையில் சோதனை நடத்தினர்.

அங்கு பதுக்கி வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளவு கொண்ட 425 கேன் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். அவற்றை காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக ரமேஷை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

.

மூலக்கதை